< Back
சினிமா செய்திகள்
ஸ்ரீகாந்த் படத்தில் நடிக்க முதலில் ஜோதிகா விரும்பவில்லை... சூர்யாதான் - இயக்குனர் துஷார்
சினிமா செய்திகள்

'ஸ்ரீகாந்த்' படத்தில் நடிக்க முதலில் ஜோதிகா விரும்பவில்லை... சூர்யாதான் - இயக்குனர் துஷார்

தினத்தந்தி
|
27 April 2024 10:41 AM IST

ஜோதிகா தற்போது 'ஸ்ரீகாந்த்' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஜோதிகா 1998-ல் 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் 'சைத்தான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் ஜோதிகா தற்போது 'ஸ்ரீகாந்த்' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

பிரபலமான பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகி உள்ளது. தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் துஷார் 'ஸ்ரீகாந்த்' படத்தில் ஜோதிகா நடித்தது குறித்து பேசுகையில், ஜோதிகா ஒரு சிறந்த நடிகை. இவர் முதலில் 'ஸ்ரீகாந்த்' படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. பின்னர் சூர்யாசார்தான் படத்தின் கதையை படித்து பார்த்து ஜோதிகாவை படத்தில் நடிக்க வைத்தார். என்றார்

மேலும் செய்திகள்