< Back
சினிமா செய்திகள்
Did you know Baahubali actor Anushka Shetty suffers from rare laughing condition? Heres everything about it
சினிமா செய்திகள்

'அந்த நோய் இருப்பதால் என்னால்...' - வியாதி குறித்து பகிர்ந்த அனுஷ்கா

தினத்தந்தி
|
19 Jun 2024 6:53 PM IST

நடிகை அனுஷ்கா அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

சென்னை,

கதாநாயகிகள் தங்களுக்கு உள்ள வியாதியை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி இருப்பதாக தெரிவித்தார்.

நடிகை மம்தா மோகன்தாஸ் தனக்கு சரும பாதிப்பு இருப்பதாக கூறினார். தீபிகா படுகோனே, சுருதிஹாசன் போன்றோரும் ஆரோக்கிய பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்காவும் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு பிரச்சினையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது வேறு மாதிரியான சிரிப்பு. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பேன். என்னால் அந்த நேரத்தில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது.

படப்பிடிப்பு அரங்கில் நான் சிரிக்க ஆரம்பித்தால் படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியதுதான். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்த இடைவெளியில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் டிபன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு முடித்து விடுவார்கள்'' என்றார்.

மேலும் செய்திகள்