< Back
சினிமா செய்திகள்
Did you know actress wasnt given any steps for iconic song UP Bihar Lootne?
சினிமா செய்திகள்

இந்த பாடலுக்கு நடனமாட இவருக்கு ஸ்டெப்பே தரவில்லையாம் - எந்த பாடல் தெரியுமா?

தினத்தந்தி
|
8 Jun 2024 12:55 PM IST

ஷில்பா ஷெட்டி, திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை,

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் பெரும்பாலும் இந்தி மொழி திரைப்படங்களிலையே நடிப்பவர். இந்தி மொழியை தவிர தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

பல படங்களில் தனது நடனத்தால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளைக்கொண்டவர் ஷில்பா ஷெட்டி. அப்படி இவர் ஆடிய யுபி பீகார் லூட்னே பாடல் ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தை அவருக்கு கொடுத்தது.

இன்று நடிகை ஷில்பா ஷெட்டி தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யுபி பீகார் லூட்னே பாடலில் தனக்கு நடன ஸ்டெப்கள் தராததை நடிகை ஷில்பா ஷெட்டி வெளிப்படுத்தினார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் சுகி. அப்போது அப்படத்தில் நடித்த சக நடிகையான குசா குபிலாவுடன் நடந்த உரையாடலின்போது இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கூறுகையில்,

எனக்கு இப்பாடலில் நடன ஸ்டெப்கள் எதுவும் தரவில்லை. நானாகவே ஸ்டெப் போட்டு இப்பாடலுக்கு நடனமாடினேன். இப்படலுக்காக நான் உடுத்திய ஆடை சூட்டிங்கிற்கு 2 மணி நேரத்திற்கு முன்புதான் தயாரானது. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்