< Back
சினிமா செய்திகள்
Did Vijay Sethupathi reject crucial role in Allu Arjuns Pushpa: The Rise? Actor gives quirky response
சினிமா செய்திகள்

புஷ்பா: தி ரைஸ் - நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதியின் குழப்பமான பதில்

தினத்தந்தி
|
18 Jun 2024 2:51 PM IST

புஷ்பா: தி ரைஸ் படப்பிடிப்பின்போது, ​​விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும், நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.

தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், அதை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது, விஜய் சேதுபதியிடம் புஷ்பா: தி ரைஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஜய் சேதுபதி, 'இல்லை, நான் புஷ்பா படத்தில் நடிக்க மறுக்கவில்லை', என்றார். தொடர்ந்து பேசிய அவர், 'ஆனால் எப்போதும் நீங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடாது. அது உங்களுக்கு நல்லது கிடையாது. சில நேரம் பொய் பேசுவது நல்லது', என்றார்.

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த பேச்சு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. முன்னதாக, புஷ்பா: தி ரைஸ் படப்பிடிப்பின்போது, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்