ஒரே வீட்டில் தீபாவளி கொண்டாடிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா?
|அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அமராவதி,
தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நடித்த 'கீதா கோவிந்தம்'திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், இவர்கள் இருவரையும் இணைத்து பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலா வந்தது. அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவை காதலிப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில். தற்போது இருவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவருமே தங்களை பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், "Happy Diwali my loves" என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை கவனித்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களில் பின்னணியில் உள்ள வெளிப்படையான ஒற்றுமையைக் கண்டுபிடித்து இருவரும் ஒன்றாக தீபாவளியைக் கொண்டாடியிருக்கலாம் என்று யூகிக்க தொடங்கினர்.
ஆம், இது விஜய் தேவரகொண்டா இல்லம் என்றும், இருவரின் புகைப்படத்திலும் ஒரே மாதிரியான சுவர் இருப்பதை கருத்தில் கொண்டு இரண்டு புகைப்படங்களையும் வைரலாக்க தொடங்கினர்.இதற்கு முன்னதாக, வெளிநாட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் ஒன்றாக நீராடிய புகைப்படத்தை வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.