< Back
சினிமா செய்திகள்
விஜய்க்கு  நோ சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை
சினிமா செய்திகள்

விஜய்க்கு 'நோ' சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை

தினத்தந்தி
|
2 May 2024 2:56 PM IST

நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் விஜய்க்கு நோ சொன்ன அவர், அஜித்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்"(கோட்) என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாய் வரவேற்பு பெறாமல் போனது. இதனால், அடுத்து வரக்கூடிய பாடல்களாவது கொண்டாட்டமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜயின் பிறந்த நாளான ஜூன் மாதம் இரண்டாவது சிங்கிள் வரும் என இயக்குநர் வெங்கட்பிரபு அறிவித்திருக்கிறார். அது நிச்சயம் காதல் பாடல்தான் என சொல்லி இருக்கிறார் படத்தில் நடித்துள்ள அஜ்மல்.

இப்படியான சூழ்நிலையில்தான் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிகர் விஜயின் 'கோட்' படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க மறுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது நடனம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழில் படங்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில்தான் விஜயின் 'கோட்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு அவருக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்க வேண்டாம் கதாநாயகியாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த ஸ்ரீலீலா இந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

அதே சமயத்தில் அவருக்கு வந்த மற்றொரு வாய்ப்புதான் அஜித்தின் 'குட் பேட் அக்லி' ஹீரோயின் வாய்ப்பு. அதனால், விஜய்க்கு 'நோ' சொல்லிவிட்டு அஜித் பட ஹீரோயின் வாய்ப்பை சந்தோஷமாக ஓகே சொல்லி இருக்கிறாராம் ஸ்ரீலீலா. விஜய்- ஸ்ரீலீலா நடனத்தை திரையில் பார்க்கலாம் என நினைத்திருந்த விஜய் ரசிகர்கள் இதனால் ஸ்ரீலீலா மீது செம அப்செட்.

மேலும் செய்திகள்