< Back
சினிமா செய்திகள்
பெரியாரை சீண்டினாரா சந்தானம்..? பொங்கல் வாழ்த்து வீடியோவால் வெடித்த சர்ச்சை
சினிமா செய்திகள்

பெரியாரை சீண்டினாரா சந்தானம்..? பொங்கல் வாழ்த்து வீடியோவால் வெடித்த சர்ச்சை

தினத்தந்தி
|
16 Jan 2024 6:25 PM IST

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனது.

சென்னை,

நடிகர் சந்தானம் சமீபத்தில் வெளியான 'கிக்' படத்திற்கு பின்னர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என பெயரிடப்பட்டுள்ளது.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதியன்று வெளியாகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. அதில் 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ' என்று இடம்பெற்றுள்ள வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இடம்பெற்றுள்ள 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ, நா அந்த ராமசாமி இல்ல' என்ற வசனத்தை சந்தானம் பேசி சாமிக்கு பூஜை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்திலேயே சர்ச்சை வெடித்தது. சமூக வலைதளங்களில் பலரும் சந்தானத்தை விமர்சித்து பதிவிட்டிருந்தனர். பலர் சந்தானம் பெரியாரை விமர்சித்து இந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

இதனால் அந்த வீடியோவை சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார். தற்போது அந்த வீடியோ மற்றும் சந்தானத்தின் எக்ஸ் பதிவு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்