< Back
சினிமா செய்திகள்
எனக்காக ஓட்டலில் காத்திருந்த கிரிக்கெட் வீரர்- ஊர்வசி ரவுடேலா
சினிமா செய்திகள்

எனக்காக ஓட்டலில் காத்திருந்த கிரிக்கெட் வீரர்- ஊர்வசி ரவுடேலா

தினத்தந்தி
|
14 Aug 2022 3:11 PM IST

ஊர்வசி ரவுடேலா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், தனது திரையுலகப் பயணம் பற்றியும், தனது வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அருள் சரவணன் ஜோடியாக 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து அறிமுகமானார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்தார். அப்போது நிறைய பேர் தன்னிடம் காதல் வலையை வீசி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷாப் பண்ட் குறித்தும் சில கருத்துகளை அவர் அப்போது தெரிவித்தார். 'தன்னை சந்தித்து பேசுவதற்காக ஓட்டலில் நீண்ட நேரம் ரிஷாப் பண்ட் காத்திருந்தார்' என்று அவர் குறிப்பிட்டார்.

ஊர்வசி ரவுடேலாவின் இந்த கருத்துக்கு ரிஷாப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "பிரபலமாக வேண்டும், நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பெயருக்காகவும், பிரபலமாவதற்காகவும் இப்படியெல்லாம் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது. கடவுள்தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்