< Back
சினிமா செய்திகள்
தக் லைப் படத்தில் அசோக் செல்வன்?
சினிமா செய்திகள்

'தக் லைப்' படத்தில் அசோக் செல்வன்?

தினத்தந்தி
|
27 May 2024 1:01 PM IST

நடிகர் அசோக் செல்வன், ‘தக் லைப்’ படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபகாலமாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்களும் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் வெளியானது. மேலும் எமக்குத் தொழில் ரொமான்ஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் அசோக் செல்வன்.

இந்நிலையில் இவர், தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "அந்த உண்மையான மறக்க முடியாத நாட்களில் அற்புதங்கள் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அசோக் செல்வன், தக் லைப் படத்தில் தான் நடிக்கப் போவதை தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு அசோக்செல்வனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அசோக் செல்வன், தக் லைப் படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்