< Back
சினிமா செய்திகள்
தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இத்தனை கோடி வசூலா ?
சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் மட்டும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா ?

தினத்தந்தி
|
17 March 2024 10:12 PM IST

'மஞ்சுமெல் பாய்ஸ்' கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது

சென்னை,

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 22ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலக முழுவதும் ரூ.175 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் ரூ. 50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ். படைத்திருக்கிறது .

மேலும் செய்திகள்