< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகை அஞ்சு குரியனை மணந்தாரா 'கனா' பட நடிகர் தர்ஷன்?
|12 April 2024 12:34 PM IST
நடிகர் தர்ஷன் தமிழில் கனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன். இவர் தமிழில் 'கனா' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். துணிவு, அயலான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தர்ஷன், மணமேடையில் நடிகை மஞ்சு குரியனுடன் திருமணக் கோலத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த புகைப்படம் மணமக்களை மையமாக வைத்து இல்லை. நகைகளை மையமாக வைத்தே உள்ளது. இதனால் இந்த புகைப்படம் நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டு இருக்கலாம். மேலும் , இந்த புகைப்படம் குறித்து இருவரும் எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
நடிகை மஞ்சு குரியன் சினிமா துறையில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானார். மேலும், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.