'துருவ நட்சத்திரம்' 2-வது சிங்கிள் ஜூலை 19-ல் ரிலீஸ்
|படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் உள்ளது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில், ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Heralding the arrival of DHRUVA NATCHATHIRAM with this song that's releasing on the 19th.. #HisNameIsJohn #DhruvaNatchathiram @chiyaan @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru @Preethisrivijay @SonyMusicSouth @gobeatroute @DoneChannel1 pic.twitter.com/bQkQFM8iyb
— Gauthamvasudevmenon (@menongautham) July 15, 2023