< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விரைவில் துருவ நட்சத்திரம் 2வது பாடல் மற்றும் டிரெய்லர்... இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை
|12 July 2023 1:41 AM IST
விரைவில் இரண்டாவது பாடலும், டிரெய்லரும் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் உள்ளது. இந்த சூழலில், படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் மீண்டும் இசையமைத்து 4 பாடல்களை தயார் செய்துள்ளதாகவும், ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், விரைவில் இரண்டாவது பாடலும், டிரெய்லரும் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை..."விரைவில் 2வது பாடல், டிரெய்லர் ரிலீஸ்"#vikram #GauthamVasudevMenon #dhuruvanakshathram #ThanthiTV https://t.co/xOlxIKLyHB
— Thanthi TV (@ThanthiTV) July 11, 2023