< Back
சினிமா செய்திகள்
டோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சினிமா செய்திகள்

டோனி தயாரிக்கும் 'லெட்ஸ் கெட் மேரீட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தினத்தந்தி
|
20 July 2023 6:27 PM IST

டோனி தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.

சென்னை,

டோனி எண்டர்டெயின்மெண்ட் உருவாக்கியுள்ள 'லெட்ஸ் கெட் மேரீட்' படத்தை பிரபல இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கினார். தற்போது, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் இம்மாதம் 28ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாண், ஹீரோயினாக நடிகை இவானாவும் நடித்துள்ளனர். அதைப்போல நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய், மோகன் வைத்தியா, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்