< Back
சினிமா செய்திகள்
Dhevathai Video Song from Kozhipannai Chelladurai
சினிமா செய்திகள்

'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் 'தேவதை' பாடல் வீடியோ வெளியானது

தினத்தந்தி
|
17 Sept 2024 10:37 AM IST

யோகி பாபு நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் ‘தேவதை’ பாடல் வீடியோ வெளியானது

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை' 'மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இது பெற்றுள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து, 'காத்திருந்தேன்', 'பொன்னான பொட்டப்புள்ள' என்ற பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், 'தேவதை' என தொடங்கும் புதிய பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனுடன், 'இந்த பாடல் உலகெங்கிலும் வாழும் திருநங்கையர்க்கு சமர்ப்பணம்' என்று இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்