< Back
சினிமா செய்திகள்
தீனா திரைப்படம் ரீ-ரிலீஸ்... திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்
சினிமா செய்திகள்

'தீனா' திரைப்படம் ரீ-ரிலீஸ்... திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்

தினத்தந்தி
|
1 May 2024 9:24 PM IST

அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 'தீனா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீசானது.

சென்னை,

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ல் வெளிவந்த திரைப்படம் 'தீனா'. இந்த படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பிறகு அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது. இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 'தீனா' திரைப்படம் டிஜிட்டல் முறையில் இன்று அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ-ரிலீசானது.

'தீனா' படத்தை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில், 'தீனா' படம் திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்கள் சிலர், மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை திரையரங்கிற்குள் வெடித்து ஆட்டம் போட்டனர். இதனால் திரையரங்குக்குள் புகை மூட்டம் சூழ்ந்தது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்