< Back
சினிமா செய்திகள்
ஆஸ்கர் நூலகத்துக்கு தேர்வான ராயன்  திரைக்கதை
சினிமா செய்திகள்

ஆஸ்கர் நூலகத்துக்கு தேர்வான 'ராயன்' திரைக்கதை

தினத்தந்தி
|
2 Aug 2024 3:00 PM IST

ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்துக்கு தேர்வாகியுள்ளதென தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

தனுஷ் எழுதி இயக்கி நடித்த 50-வது திரைப்படமான 'ராயன்' சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தேர்வாகியுள்ளதென தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலர் ஒரு இயக்குநராக தனுஷ்க்கு இது மாபெரும் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைக்கதை தேர்வாகியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்