நடிகர் தனுஷ் இயக்கும் 4வது படத்தின் பெயர் அறிவிப்பு
|தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள நான்காவது படத்திற்கு "இட்லிக்கடை" என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
ப. பாண்டி திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள 50-வது படமான ராயன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் இவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள மூன்றாவது படம். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.
இதையடுத்து தனுஷ் இயக்கத்தில் நான்காவதாக ஒரு படம் உருவாகவுள்ளது. தனுஷ் இயக்கும் நான்காவது படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு "இட்லிக்கடை" என்று பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் 52 ஆவது படமாக இது வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், நடிகர்கள் சத்யராஜ், அருண் விஜய், அசோக் செல்வன்,ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.