< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் `குபேரா திரைப்படத்தின் அப்டேட் - படக்குழு அறிவிப்பு

image courtesy:twitter@KuberaTheMovie

சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் `குபேரா' திரைப்படத்தின் அப்டேட் - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
30 April 2024 7:57 AM IST

இந்தாண்டு இறுதிக்குள் 'குபேரா' திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில்தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

குபேரா படத்தில் தனுஷின் கெட்டப் வித்தியாசமாக இருப்பதால் கண்டிப்பாக இப்படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பின் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்