< Back
சினிமா செய்திகள்
ராயன் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்
சினிமா செய்திகள்

'ராயன்' படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்

தினத்தந்தி
|
4 April 2024 8:15 PM IST

‘ராயன்’ திரைப்படத்தை ஜூன் 7-ம் தேதி வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் குறித்த ஒரு புதிய அப்டேட்டை பதிவு செய்துள்ளது. அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் இந்த மூன்று கோம்போவில் எந்த கோம்போவுக்கு மரணம் வெயிட்டிங் என பதிவு செய்தது.

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

'ராயன்' திரைப்படத்தை ஜூன் 7-ம் தேதி வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மொத்தத்தில் 'ராயன்' திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டீசர் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதால் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்