< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
3 மொழிகளில் வெளியாகும் தனுஷின் 50-வது படம்: பெயர்-பர்ஸ்ட் லுக் வெளியானது
|19 Feb 2024 7:23 PM IST
தனுஷின் 50-வது படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது
சென்னை,
நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில், தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.
ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிலில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.