< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிப்பில் செல்வராகவனின் அடுத்த படம்
சினிமா செய்திகள்

தனுஷ் நடிப்பில் செல்வராகவனின் அடுத்த படம்

தினத்தந்தி
|
24 Jun 2022 3:31 PM IST

புதுப்பேட்டை2 திரைப்படம் விரைவில் தொடங்கும் என்று படத்தின் இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன?' ஆகிய படங்களை இயக்கியவர், அவரது அண்ணன் செல்வராகவன். இதில் 'புதுப்பேட்டை' படத்தில் கொக்கி குமார் எனும் கதாபாத்திரத்தில் தனுஷ், ஒரு ரவுடியின் நிஜ வாழ்க்கையை கண் முன் நிறுத்தி பயத்தை ஏற்படுத்தியிருப்பார்.

புதுப்பேட்டை படம் 2006-ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இதன் 2-ம் பாகம் நிச்சயம் எடுப்பேன் என்று செல்வராகவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செல்வராகவனிடம், புதுப்பேட்டை-2 எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, 'ஆயிரத்தில் ஒருவன்-2 படத்துக்கு முன்பாக தொடங்கும்' என்று அவர் பதில் அளித்தார்.

'ஆயிரத்தில் ஒருவன்-2' படம் 2024-ம் ஆண்டில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தனுசை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் 'நானே வருவேன்' படம், வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு 'புதுப்பேட்டை-2' படம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்