< Back
சினிமா செய்திகள்
5 படங்களில் நடிக்கும் தனுஷ்..!
சினிமா செய்திகள்

5 படங்களில் நடிக்கும் தனுஷ்..!

தினத்தந்தி
|
30 July 2023 6:46 AM GMT

தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது அவரது 48-வது படமாகும்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான தனுஷ் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர 'தி எக்ஸ்டிரார்டினரி ஜர்னி ஆப் த பகிர்' என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது அவரது 48-வது படமாகும்.

இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும், தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும், இந்த படத்துக்கு 'தேரே இஸ்ம் மேயின்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது 5 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இதனால் அவரை பான் இந்தியா ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்