< Back
சினிமா செய்திகள்
இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ்?  - நாளை வெளியாகும் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ்? - நாளை வெளியாகும் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
19 March 2024 9:48 PM IST

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனிடையே தற்போது நடிகர் தனுஷ் பிரபல இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க இருக்கிறார்.

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம் தான் அன்னக்கிளி. இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. இவரது 1000-ம் படம் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை.

இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுப்பது என்னும் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகர் தனுஷ்.

இயக்குநர் அருண் மாதீஸ்வரனை இளையராஜா தனது வாழ்க்கை வரலாற்றை இயக்க தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படங்கள் ஆகும்.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்