மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்?
|தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் நடிக்கவும் தனுசுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தனுஷ் தமிழ் படங்களை தாண்டி வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப், அக்ஷய்குமாருடன் அட்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் ரியான் காஸ்லிங், கிரிஸ் எவான்ஸ், ஆகியோருடன் இணைந்து நடித்து இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷ் சிறிது நேரமே வந்தாலும் அவரது சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் நடிக்கவும் தனுசுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே தனுஷ் நடிப்பை ரியான் காஸ்லிங், கிரிஸ் எவான்ஸ் ஆகியோரும் இயக்குனர்களும் பாராட்டி உள்ளனர். தனுஷ் தமிழில் நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.