தனுஷின் 52வது படம் குறித்த அப்டேட்
|தனுஷின் 52 ஆவது படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை தனுஷே இயக்கியும் இருந்தார். தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு 'குபேரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மும்பை தாராவியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
அடுத்ததாக தனுஷ் தனது 52வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் நடிகர் தனுஷ் இயக்குகிறார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் 52வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனமும் நடிகர் தனுஷும் இன்று மாலை 5 மணி அளவில் 52வது படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.