ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
|தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.
வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் துஷாரா விஜயனின் 'துர்கா' கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படம் 'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படத்திற்கு தான் அதிகம். தனுஷ் நடித்த படங்களிலே ராயன் அதிகம் வசூலித்த படமாகும். 2024 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. படமானது உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைத் தாண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவே, நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே பெரிய வசூலைப் பெற்றிருக்கிறது. தனுஷ் 50-வது படத்தில் வெற்றி பெற்றிருப்பது அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. தற்போது, படத்தின் உருவாக்க வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது, ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது