தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!
|நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
சென்னை,
'ராக்கி', 'சாணிக் காயிதம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாசியில் உருவாக உள்ள இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதியும் 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2-ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.