< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
22 Jan 2023 6:30 PM IST

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'கேப்டன் மில்லர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார்.

மேலும், இப்படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்