ரஜினிகாந்தின் 'கூலி' - தனுஷின் பதிவு வைரல்
|படத்தின் பெயர் வெளியானதையடுத்து நடிகர் தனுஷ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
ரஜினிகாந்தின் 171 -வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகின.
இதில், படத்தின் பெயர் 'கூலி' என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில், படத்தின் பெயர் வெளியானதையடுத்து நடிகர் தனுஷ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'மாஸ்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.