< Back
சினிமா செய்திகள்
3 மொழிகளில் தனுஷ் படம்
சினிமா செய்திகள்

3 மொழிகளில் தனுஷ் படம்

தினத்தந்தி
|
30 Nov 2022 11:26 AM IST

தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இயக்க உள்ளனர்.

தனுஷ் தற்போது தெலுங்கு டைரக்டரான வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற பெயர்களில் தயாராகி உள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ஆந்திராவில் தனுசுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே சார் படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து மீண்டும் தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். சேகர் கம்முலா ஆந்திராவில் முன்னணி டைரக்டராக உள்ளார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே லீடர், பிடா, லவ் ஸ்டோரி உள்ளிட்ட தெலுங்கு படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தனுஷ் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இயக்க உள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்