'புதுப்பேட்டை' 2-ம் பாகத்தில் நடிக்க தயாராகும் தனுஷ்
|‘புதுப்பேட்டை’ 2-ம் பாகத்தில் நடிக்க தனுஷ் தன்னை தயார்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ஏற்கனவே 'காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக 2-ம் பாகம் படங்கள் அதிகம் வருவதால் 'புதுப்பேட்டை' படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து 'புதுப்பேட்டை' 2-ம் பாகம் உருவாகும் என்று செல்வராகவனும் அறிவித்து இருந்தார்.
2-ம் பாகம் பட வேலைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் 'புதுப்பேட்டை 2' படத்துக்கான திரைக்கதை எழுதும் பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், தனுசும் இந்தப்படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'புதுப்பேட்டை' படம் 2006-ல் திரைக்கு வந்தது. இதில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனியா அகர்வால், சினேகா ஆகியோரும் நடித்து இருந்தனர்.