50-வது படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ்
|தனுஷ் நடித்த வாத்தி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்து விட்டு தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த படத்தை தனுசே டைரக்டு செய்து கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தனுசுக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ப. பாண்டி படத்தை டைரக்டு செய்து இருந்தார். மீண்டும் படம் இயக்க தயாராகி உள்ளார்.
இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடிப்பதாகவும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. வட சென்னை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் மோதல் கதையம்சம் கொண்ட படம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.