உண்மை கதையில் தனுஷ்
|உண்மை கதையில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தின் வெற்றிக்கு பிறகு உண்மை சம்பவங்களை படமாக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் தனுசும் உண்மை கதையில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இதுகுறித்து வினோத் அளித்துள்ள பேட்டியில், நான் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் சொன்ன உண்மை சம்பவத்தை படமாக்க இருக்கிறேன்.' என்று கூறியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று தெரிகிறது. தனுஷ் இதுவரை போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்குமாரை வைத்து வினோத் இயக்கி உள்ள 'துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. தனுஷ் 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.