< Back
சினிமா செய்திகள்
தனுசின் புதிய படம்
சினிமா செய்திகள்

தனுசின் புதிய படம்

தினத்தந்தி
|
15 May 2023 11:27 PM IST

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வந்தன. இதில் திருச்சிற்றம்பலம் பெரிய வெற்றி பெற்றது. தி கிரே மேன் ஹாலிவுட் படமும் வெளியாகி உலக அளவில் தனுசை பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரான வாத்தி படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார்.

கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை நெல்சன் டைரக்டு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தனுசும் நெல்சனும் சந்தித்து இதுகுறித்து பேசியதாக கூறப்படுகிறது. நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை டைரக்டு செய்து வருகிறார். ஜெயிலர் படம் முடிந்ததும் தனுஷ் படப்பிடிப்பை தொடங்குவார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்