< Back
சினிமா செய்திகள்
தனுஷ் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு?
சினிமா செய்திகள்

தனுஷ் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு?

தினத்தந்தி
|
22 Oct 2022 7:47 AM IST

தனுஷ் நடித்த வாத்தி படத்தை தெலுங்கில் திரையிட தேதி தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் சந்தைப்படுத்தலை விரிவுபடுத்த தமிழ் நடிகர்களை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படங்களை தயாரிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே தமிழ் படங்கள் ஆந்திராவில் வசூல் குவிப்பதும் இதற்கு காரணம்.

விஜய்யை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ இரு மொழிகளில் படம் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு தமிழில் வாரிசு என்றும், தெலுங்கில் வாரிசுடு என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இதுபோல் சிவகார்த்திகேயனை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் சுனைல் நாரங் தயாரித்துள்ள பிரின்ஸ் படம் இரு மொழிகளிலும் நேற்று வெளியானது.

இதுபோல் தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற பெயர்களில் தயாராகி உள்ள படம் டிசம்பர் 2-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் அதே நாளில் மேலும் சிலதெலுங்கு படங்கள் திரைக்கு வருவதால் வாத்தி படத்தை தள்ளி வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்