தனுஷ் பட நடிகைக்கு ஆண் குழந்தை
|தனுஷ் ஜோடியாக ராஞ்சனா இந்தி படத்தில் நடித்த நடிகைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சோனம் கபூர். இவர் தனுஷ் ஜோடியாக ராஞ்சனா இந்தி படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழிலும் வந்தது. சோனம் கபூர் பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள். இவர் 2018-ல் தொழிலதிபர் ஆனந்த் அகுஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டெல்லியில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் கர்ப்பமாக இருப்பதாக சோனம் கபூர் அறிவித்தார். கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சோனம் கபூருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சோனம் கபூருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சோனம் கபூரும் ஆனந்த் அகுஜாவும் வெளியிட்டுள்ள பதிவில், ''எங்களுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தையை வரவேற்கிறோம். டாக்டர் களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளனர். சோனம் கபூருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.