< Back
சினிமா செய்திகள்
Dhadak 2: Siddhant Chaturvedi and Triptii Dimri starrer confirmed to be a remake of Pa Ranjith’s Tamil film Pariyerum Perumal
சினிமா செய்திகள்

பாலிவுட்டில் ரீமேக்காகும் 'பரியேறும் பெருமாள்'

தினத்தந்தி
|
27 May 2024 8:20 PM IST

'பரியேறும் பெருமாள்' திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதாநாயகனாக கதிரும் கதாநாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பா.ரஞ்சித் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

சாதி பிரச்சினையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது. இப்படத்திற்கு தடக் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. கரண் ஜோகர் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. சித்தார்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும், இப்படம் நவம்பர் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தத் தலைப்பின் முதல் பாகமான தடக் படம், சாய்ராத் என்ற படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வெளியானது.

மேலும் செய்திகள்