< Back
சினிமா செய்திகள்
அஜித்துடன் மீண்டும் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்- வெளியான தகவல்
சினிமா செய்திகள்

அஜித்துடன் மீண்டும் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்- வெளியான தகவல்

தினத்தந்தி
|
20 Jan 2024 10:59 AM IST

'விடாமுயற்சி'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித்தின் 'வீரம்' திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்