ஜான்வி கபூர் பகிர்ந்த 'தேவரா' படப்பிடிப்பு வீடியோ
|‘தேவரா’ படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னை,
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அனிரூத் இசையில் 'தேவரா' படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் 'பத்தவைக்கும்' என்ற பாடலின் படப்பிடிப்பு வீடியோவை நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.