< Back
சினிமா செய்திகள்
உலகளவில் ரூ. 396 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள தேவரா படம்!
சினிமா செய்திகள்

உலகளவில் ரூ. 396 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள "தேவரா" படம்!

தினத்தந்தி
|
3 Oct 2024 3:11 PM IST

ஜூனியர் என்டிஆரின் 'தேவரா பாகம்-1' உலகளவில் ரூ.396 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஜூனியர் என்டிஆரின் 30வது படமான 'தேவரா பாகம்-1' கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தநிலையில், 2-வது நாளில் உலகளவில் ரூ. 243 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் தேவரா படம் 6 நாட்களில் ரூ. 396 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்