திரிஷாவுக்கு காலில் காயம்
|நடிகை த்ரிஷா காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திரிஷா காலில் கட்டுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிஷா கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கினர். இந்த நிலையில் தனது காலில் கட்டுப்போட்டுள்ள புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டதாக பதிவு வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பதறிய ரசிகர்கள் திரிஷாவுக்கு என்ன ஆச்சு? விபத்தில் சிக்கினாரா? காலில் எலும்பு முறிவா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து திரிஷா தரப்பில் கூறும்போது, ''திரிஷாவுக்கு ஏற்கனவே காலில் சிறிய காயம் இருந்தது. தற்போது அதில் வலி அதிகமாகி காலில் பெரிய வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று காலில் கட்டு போடப்பட்டு உள்ளது. டாக்டர் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்" என்றனர். திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரிய வெற்றி பெற்றது.