14 வருடங்களில் 9 தோல்வி படங்கள்...இருந்தும் இந்த நடிகைக்கு கத்ரீனா, ஆலியாவை விட ரசிகர்கள் அதிகம்
|இவர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பாகி 3, ஸ்ட்ரீட் டான்சர் 3டி, பட்டி குல் மீட்டர் சாலு, ஹசீனா பார்கர், ஓகே ஜானு, ராக் ஆன் 2, ஹாப் கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட 9 படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன.
தற்போது இவரது நடிப்பில் 'ஸ்ட்ரீ 2' படம் வெளியாகி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இது ஷ்ரத்தா கபூரை, தீபிகா படுகோன், ஆலியா பட் உள்பட பல பாலிவுட் நடிகைகளை விட அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை கொண்ட நடிகை என்ற ஒரு தனிப்பட்ட மைல்கல்லை அடைய உதவியது. ஷ்ரத்தா கபூருக்கு இன்ஸ்டாகிராமில் மொத்தம் 91.6 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
நடிகைகளில் அடுத்தபடியாக, இன்ஸ்டாகிராமில் 85.1 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஆலியா பட் உள்ளார், கத்ரீனா கைப் 80.4 மில்லியன், தீபிகா படுகோன் 79.8 மில்லியன், மற்றும் அனுஷ்கா ஷர்மா மொத்தம் 68.5 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நடிகைகளில் இரண்டாவது அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக ஷ்ரத்தா கபூர் உள்ளார்.