சாக்ஷி அகர்வால் ஆசைகள்
|வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்த ஆசைகள் உள்ளன என்று நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பிரபலமான சாக்ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். நான் கடவுள் இல்லை படத்தில் நடிப்பை பாராட்டினர்.
பிரபுதேவாவின் பஹீரா படத்தில் வில்லியாக வந்தார். ஓ.டி.டி.யில் வெளியான என் எதிரே ரெண்டு பாப்பா படத்தில் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் தான் நடித்த 3 படங்கள் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். சாக்ஷி அகர்வால் கூறும்போது, "எனது கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் இருக்க கூடாது என்பதில் கவனம் வைக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை.
வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்த ஆசைகள் உள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் கிராமத்து வேடத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.
எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த பட வாய்ப்புகளை கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை
திரைப்படம் என்பது எனது கனவு. அதனால்தான் டான்ஸ், ஆக்ஷன் கற்றுக்கொள்ள தனியாக கிளாஸ் போய்க்கொண்டிருக்கிறேன். 'நான் கடவுள் இல்லை' படத்தில் நான் நடித்த ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தது மகிழ்ச்சி" என்றார்.