< Back
சினிமா செய்திகள்
சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை கீர்த்தி சுரேஷ்
சினிமா செய்திகள்

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை - கீர்த்தி சுரேஷ்

தினத்தந்தி
|
16 May 2024 10:33 AM IST

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு திறமையான நடிகை என்ற பெயர் எடுத்த கீர்த்தி சுரேஷ், சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, "நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு இன்னும் பொறுப்போடு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

சில கதாபாத்திரங்கள் நடிகர், நடிகைகளின் வாழ்க்கையில் தொழில் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் கோணத்தை மாற்றிவிடும். இனி உன் பயணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அந்த கதாபாத்திரங்கள் அவர்களை கட்டிப்போட்டு விடும். நல்ல கதாபாத்திரங்களுக்கு இருக்கும் பலம் அதுதான்.

நடிகையர் திலகம் படத்தில் எனக்கும் அதே அனுபவம் ஏற்பட்டது. இந்த படத்துக்கு பிறகு இன்னும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நான் நடிக்கும் எல்லா படங்களும் அதே விதமான பலனை கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. செட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் கூட அந்த கதாபாத்திரத்துடன் எமோஷன் ஆன ஒரு உறவு நீடிக்கிறது என்றால் அது நல்ல படத்துக்கான அடையாளம். ஆனால் அப்படிப்பட்ட மேஜிக் சில நேரங்களில் மட்டுமே நடந்தது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கும், எனக்கும் போரடித்துவிடும். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்