< Back
சினிமா செய்திகள்
பி.டி உஷாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை, காரணம் ...  -  நடிகை மாளவிகா மோகனன்
சினிமா செய்திகள்

பி.டி உஷாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை, காரணம் ... - நடிகை மாளவிகா மோகனன்

தினத்தந்தி
|
13 Aug 2024 8:32 PM IST

சிறு வயதில் நான் ஒரு தடகள வீராங்கனையாக இருந்தபோது பி.டி உஷா எனக்கு உத்வேகம் அளித்தார். அதனால் பி.டி உஷாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதனால் படத்தின் புரொமோசன் பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே நேற்று நடிகை மாளவிகா மோகன் எக்ஸ் தளத்தில் ரசிகர்கர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் தனக்கு பி.டி உஷா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

" எனக்கு பி.டி உஷாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை இருக்கிறது. சிறு வயதில் நான் ஒரு தடகள வீராங்கனையாக இருந்தேன். அப்போது அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தார்" என்று பதிலளித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்