டிமான்ட்டி காலனி- 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
|அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி- 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், அருள்நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.