'ஆங்கிலத்தில் பேச சொன்ன ரசிகர்கள்' - ராஷ்மிகா அளித்த ருசிகர பதில்
|'கம் கம் கணேசா' பட விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.
சென்னை,
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கடந்த 2019ல் வெளியான 'தொரசாணி' என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான 'பேபி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள கம் கம் கணேசா என்கிற படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் புரொமோசன் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார். அதில் அவர் தெலுங்கில் பேசி இருந்தார். இதனையடுத்து, அவரது டெல்லி ரசிகர்கள், அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசுமாறு எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அதற்கு பதிலளித்து ராஷ்மிகா கூறியதாவது, "என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் சரி, நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். " இவ்வாறு கூறினார்.