< Back
சினிமா செய்திகள்
தாமதமாகும் அஜித் படம்
சினிமா செய்திகள்

தாமதமாகும் அஜித் படம்

தினத்தந்தி
|
28 March 2023 5:59 AM IST

அஜித்குமார் நடித்த 'துணிவு' படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானதுமே தனது 62-வது படத்தில் தொடர்ந்து நடிப்பார் என்றும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் அவரை மாற்றிவிட்டு மகிழ் திருமேனியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மாதம் வெளியிட்டு உடனடியாக படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருந்தனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை மரணம் அடைந்ததால் பட அறிவிப்பை வெளியிடுவதிலும் படப்பிடிப்பை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தாமதம் ஆவதால் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நேற்று அஜித் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தந்தை மறைவுக்கு துக்கம் விசாரித்தனர்.

மேலும் செய்திகள்