தாமதமாகும் அஜித் படம்
|அஜித்குமாரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு முடியாததால் தாமதமாக பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமார் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
வங்கி கொள்ளை கதையம்சத்தில் தயாராகிறது. இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தாமதமாக பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடிக்கும் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இருண்டு படங்களும் ஒரே நாளில் மோதும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 2014-ம் ஆண்டு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் ஒன்றாக வெளியானது. 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவர் படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.